தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தலைமை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் கடந்தாண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார்/\.
இதனைத்தொடர்ந்து கடந்த ஜூலை 1ந்தேதி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பதவியேற்றார். நிதித்துறை செயலாளராக நீண்ட காலம் பதவி வகித்து சிறப்பாக செயல்பட்டார்.
இப்பொறுப்பிற்கு6 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பரிசீலனையில் இருந்தும், தலைமை செயலாளர் வாய்ப்பு சண்முகத்திற்கு அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது பணிக்காலம் வரும் ஜூலை 31ந்தேதியோடு முடிவடைகிறது.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் புதிய அதிகாரியை நியமிப்பதற்குப் பதில் தற்போது பணிபுரிந்து வரும் தலைமை செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலத்தை நீட்டிக்கும்படி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை வைத்தது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை அதாவது 3 மாதங்களுக்கு தலைமை செயலாளர் பதவிக்காலத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…