நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே இன்று தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நோய்க்கட்டுப்பாடு பகுதியில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் நீச்சல் குளம், கடற்கரை, சுற்றுலா தலங்கள் ஆகியவை திறக்க அனுமதி இல்லை.சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலத்திலிருந்து (பாண்டிச்சேரி தவிர) தமிழகம் வருபவர்களுக்கும் , ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு செல்பவர்களுக்கும் , இ பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…