பள்ளிகளில் இனிப்பு பொங்கல்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை : முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று சத்துணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளித்திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிலையில், 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும். இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை அங்கன்வாயுப் பணியாளர்கள்/சத்துணவு அமைப்பாளர்கள் இனிப்புப் பொங்கள் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக)வாங்குவதற்கு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்றும், ஆனால், மதிய உணவு வழங்கப்படுவதில்லை என்றும் சமூக நல ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மாணவர்களுக்கு முழுமையாக மதிய உணவும் உட்கொள்ளும் வகையில், இனிப்புப் பொங்கலுடன் மதிய உணவும் சேர்த்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.