இனியாவது மோடி அரசு மனிதத்தன்மையற்ற தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – கே.பாலகிருஷ்ணன்

Default Image

இனியாவது மோடி அரசு மனிதத்தன்மையற்ற தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமில்லாமல் ஒப்புதல் தர வேண்டும்.

தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரின் இறுதி நாளான இன்று, நீட் தேர்வுக்கு எதிரான சட்டமசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்ட பேரவையில் நீட் நுழைவு தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீட் தேர்வு திணிப்பின் காரணமாக, விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களின் இழப்பு தொடர்கிறது. இத்தகைய துயரங்கள், இனியும் தொடர நாம் அனுமதிக்க முடியாது. ஆனால், ஒன்றிய பாஜக அரசாங்கம் நீட் கொடூரத்திற்கு முடிவுகட்ட மறுக்கிறது.

இன்று சட்டமன்றத்தில் வரவிருக்கும் நீட் விலக்கு மசோதா, தமிழக மக்களின் ஒருமித்த எதிர்ப்புக் குரலின் வெளிப்பாடே ஆகும். இனியாவது மோடி அரசு மனிதத்தன்மையற்ற தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமில்லாமல் ஒப்புதல் தர வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்