முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார்.
இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். 70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி பதக்கம் சான்றிதழை வழங்கி உள்ளார். அதன்பின் பேசிய அவர், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். பட்டம் பெற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இளைஞர்களே எனது நம்பிக்கை என சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும். இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம். அப்துல்கலாமின் சிந்தனை இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடியவை.
தொழில்முனைவோர் அதிகளவில் உருவாகி வருகின்றனர். ரிஸ்க் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் Risk எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள். வலிமையான அரசு தொழில்முனைவோராக விரும்புவர்களுக்கு செவி சாய்க்கிறது, உதவுகிறது; சூழலுக்கேற்ப முடிவுகளை எடுக்கவும், படிப்புகளை தேர்வு செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது மாணவர்களின் கனவை நிறைவேற்றி வரும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…