இளைஞர்களே எனது நம்பிக்கை என சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும் – பிரதமர் மோடி

Default Image

முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு  பிரதமர் மோடி பதக்கம்  சான்றிதழை வழங்கி வருகிறார். 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.  70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு  பிரதமர் மோடி பதக்கம்  சான்றிதழை வழங்கி உள்ளார். அதன்பின் பேசிய அவர், வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். பட்டம் பெற்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இளைஞர்களே எனது நம்பிக்கை என சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும். இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம். அப்துல்கலாமின் சிந்தனை இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடியவை.

தொழில்முனைவோர் அதிகளவில் உருவாகி வருகின்றனர். ரிஸ்க் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீங்கள் Risk எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் உங்களுக்கான வாய்ப்பை இழந்துவிடுவீர்கள். வலிமையான அரசு தொழில்முனைவோராக விரும்புவர்களுக்கு செவி சாய்க்கிறது, உதவுகிறது; சூழலுக்கேற்ப முடிவுகளை எடுக்கவும், படிப்புகளை தேர்வு செய்யவும் தேசிய கல்விக் கொள்கை உதவுகிறது மாணவர்களின் கனவை நிறைவேற்றி வரும் ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்