துணை முதல்வர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்!
துணை முதல்வர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் நடைபெற்றுள்ளது. இந்த தரிசனத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையிலான அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, எம்பி சம்பத், சரோஜா ஆகியோர் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து ரங்கநாதன் மண்டபத்திலுள்ள தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதமும் அவர்களுக்கும் வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வழங்கி உள்ளனர்.
மேலும் ஏழுமலையான் கோவிலில் பெரிய ஜீயர் மடத்தில் சடகோப ராமானுஜ பெரிய ஜீயரை சந்தித்து துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆசீர்வாதம் பெற்று சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர் பெரிய ஜீயர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து பிரசாதங்களை கொடுத்துள்ளார்.