எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்! அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்!
எஸ். வி. சேகருக்கு அடையாளம் தந்தது அதிமுக தான்.
எஸ்.வி.சேகர், தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிமுகவின் கொடியிலிருந்து அண்ணா படத்தை எடுத்து விடுங்கள் என ட்வீட் செய்துள்ளார். இவரது இந்த செயலுக்கு அதிமுக சார்பில், இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில், நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு இது குறித்து பேசுகையில், ‘எஸ். வி. சேகருக்கு அடையாளம் தந்தது அதிமுக தான். அவர் நன்றி மறந்தவர்” என்று விமர்சித்துள்ளார்.