தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
- தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் மற்றும் அந்த கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
அதிமுக கூட்டணியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பல இழுபறிகளுக்குப் பின்னர் வந்து சேர்ந்தது தேமுதிக. இந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ள காரணமாக அவரது மைத்துனர் சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஆகியோர் கவனித்து வந்தனர்
ஒரு வழியாக இருவரும் பேசி அதிமுகவிடம் 4 சீட்டுகள் பெற்ற பின்னர் தற்போது அந்த அமளி முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள சுதீஷ் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அந்த பகுதி மக்கள் சற்று பரபரப்பில் உள்ளனர்.