தேர்தல் ஆணையம் மீது சந்தேகம்.., இதுபோன்ற செயல்கள் அதிமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது – துரைமுருகன்

Default Image

தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐ.டி.ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு, கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய எ.வ.வேலு தனது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக தகவல் கூறப்பட்டது.

இதில் குறிப்பாக திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ. வேலுவுக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டு வந்தபோது, எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,
ஏ.வ.வேலுக்கு சம்பந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடத்தப்படுகிறது. திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் ஐ.டி.ரெய்டு நடத்துகின்றனர். இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஐடி ரெய்டு நடத்தினால் பயந்து போய் விடுவார்கள் என மத்திய அரசு நினைக்கிறது. திமுகவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக அரசு. இது போன்ற செயல்கள் அதிமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.

ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி உட்பட ஐடி ரெய்டு நடந்த இடங்களில் எதுவும் சிக்கவில்லை. வருமானவரி சோதனைக்கும், தேர்தல் ஆணையத்திற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறேன் என்றும் தேர்தல் ஆணையர் முன்கூட்டியே கருத்து தெரிவித்ததால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்கு என்று சந்தேகம் இருப்பதாக எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்