தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

tollgate

Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் என பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது.

அதில், சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நிறுத்தம் செய்யப்பட்டது. எனவே, மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்