சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
சென்னை : சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடாமல் இரவு மற்றும் அதிகாலை என 2 மின்னஞ்சல் மூலமாக வந்த மிரட்டலில், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாம்.
இந்நிலையில், மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து, அலர்ட்டான போலீசார் இன்று அதிகாலை விமான நிலையத்தில், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்குப் பின் வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, புரளி கிளப்பிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.