கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த பனகமுட்லு கிராமத்தை சார்ந்த செல்வம் (45) இவர் காவேரிபட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கடந்த 12 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
செல்வத்திற்கு பல ஆண்டுகளாக குடிக்கும் பழக்கம் உள்ளதால் மாதத்தில் பாதி நாள்கள் பள்ளிக்கு வராமல் இருந்தார். இதனால் ஆறு மாதத்திற்கு முன் ஊதிய உயர்வை குறைத்து வட்டார கல்வி அலுவலர் எச்சரிக்கை கடிதம் கொடுத்து உள்ளார்.
ஆனால் தொடர்ந்து செல்வம் குடிப்பதை நிறுத்தாமாலும் மீண்டும் பள்ளிக்கு வராமல் இருந்து உள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளி வகுப்பறையில் குடித்து விட்டு செல்வம் விழுந்து கிடந்துள்ளார்.
இது குறித்து சக ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி விசாரணை நடத்தியதில் செல்வம் குடித்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…