#BREAKING: சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கேட்டு மனு..!
பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.
சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்த அளித்ததன் பேரில் சிவசங்கர் பாபா கைது செயப்பட்டார். இப்போது, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்ததாக தீபா மீது போக்சோ சட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபா வெங்கட்ராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், சுஷில் ஹரி பள்ளியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஆங்கில ஆசிரியராக தற்போது வரை பணியாற்றி வருவதாகவும், எனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த எந்த உண்மையும் இல்லை எனவே இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் என்னென்ன நிபந்தனை வழங்குகிறதோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.