சூர்யாவின் ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக நிர்வாகிக்கு உத்தரவு…!!

Default Image

சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் உள்ள ”சொடக்கு மேல சொடக்கு” பாடலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர அதிமுக நிர்வாகிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல்வாதிகளுக்கு எதிராக ”சொடக்கு” பாடலின் வரிகள் இடம்பெற்றுள்ளதாக அதிமுக நிர்வாகி சதீஸ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் அந்த வழக்கானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யா நடித்த  ”தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் இடம் பெற்றுள்ள சொடக்கு பாடலில் உள்ள ”அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது” என்ற வரியை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தர அதிமுக நிர்வாகி சதீஸ்குமாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்