பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் சூர்யா ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அகரம் எனும் அறக்கட்டளையை நடத்திவருகிறார். இந்த அறக்கட்டளை நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்ட சூர்யா, புதிய கல்வி கொள்கையை கடுமையாக சாடினார். அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியரின்றி படிக்கும் போது நீட் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள் என கேள்வி எழுப்பினார்.
இந்த கருத்துக்கு ஆளுங்கட்சியை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கண்டனங்களை பதிவு செய்து இருந்தார்.
இதற்க்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா ரசிகர்கள் டிவிட்டரில் #SuriyaFCWarnsBJPnADMK என்ற ஹேஸ்டேக் மூலம் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.