லாக்கப் அத்துமீறல்.! நீதித்துறையும் காவல்துறையும் கடுமையாக சாடிய நடிகர் சூர்யா.!

Default Image

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் ஸ்சிறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து குறித்து நடிகர் சூர்யா ஒரு விரிவான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘அதிகார அத்துமீறல்’ முடிவுக்கு வர வேண்டும் எனும் தலைப்பில் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மகன் ஃபென்னிக்ஸ் இருவரும் சிறையில் மரணம் அடைந்தத சமபவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த லாக்கப் உயிரிழப்பு சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இதற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது எதிர்ப்புக்குரலை பலமாக பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இந்த லாக்கப் மரணம் குறித்து குறித்து நடிகர் சூர்யா ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘அதிகார அத்துமீறல்’ முடிவுக்கு வர வேண்டும் எனும் தலைப்பில் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘ லாக்கப் அத்துமீறல் காவல்துறையினரின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் அல்ல.’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘ சிறையில் அடைப்பதற்கு முன்னர், தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து நலமாக இருப்பதாக சான்று அளித்துள்ளார். அதேபோல மாஜிஸ்ட்ரேட் அவர்களை பரிசோதிக்காமலே சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் முறையான சோதனைகளும் நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல் செயல்கள் குடிமக்களின் உரிமை மீதான அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.’ என தனது குற்றச்சாட்டை பலமாக எடுத்துரைத்துள்ளார்.

‘காவல்துறையினர் தவறு செய்தால் அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது காவல்துறைக்கு தண்டனை காலம் போல ஒரு பிம்பம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.’ என குற்றம் சாட்டியுள்ளார்.

‘கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களை பாதுகாக்க கொரோனா தடுப்பு களத்தில் முன் வரிசையில் நிற்கும் காவல்துறையினருக்கு தான் தலைவணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு தனது கடும் கண்டனங்களை பதிவு செய்வதாக அந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்