“சூர்யா திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நாயகன் தான்!”- சீமான்
நீட் தேர்விற்கு எதிராக குரல்கொடுத்த சூர்யாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது ஆதரவை தெரிவித்தார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நேற்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது. நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்காரணமாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது, மனசாட்சியை உலுக்கியது. கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழக்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கணைப்பாளர் சீமான், நீட் தேர்விற்கு எதிராக குரல்கொடுத்த சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
‘நீட்’ தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத்தம்பி சூர்யா அவர்களது கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
அவர் திரையில் மட்டுமல்ல; நிஜத்திலும் நாயகன்தான்! @Suriya_offl
— சீமான் (@SeemanOfficial) September 14, 2020
அந்த பதிவில், “நீட் தேர்வு எனும் சமூக அநீதிக்கெதிராக பொறுப்புணர்வோடும், கண்ணியத்தோடும் அறச்சீற்றம் செய்த அன்புத்தம்பி சூர்யா அவர்களது கருத்துகளை முழுமையாக ஆதரிக்கிறேன் என கூறினார். மேலும், சூர்யாவிற்கு என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும் தெரிவித்த சீமான், அவர் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நாயகன்தான் என புகழாரம் சூட்டினார்.