குட்நியூஸ்…மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு சர்ப்ரைஸ் – தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

Default Image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களால் 2021 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் “மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும்,மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும் அனைத்து திருக்கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கக்கூடாது எனவும் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு தற்போது மேற்படி அறிவிப்பு அனைத்து திருக்கோயில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து,கடந்த 2022-2023-ம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

“திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றி திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்நிலையில்,திருக்கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்தில் திருக்கோயில் சார்பாக மணமக்களுக்கு புத்தாடைகள் வழங்க தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்