ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 80 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வந்தனர்.
சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.இதனையடுத்து இன்று அதிகாலை 2 மணி அளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.ஆழ்துளை கிணற்றில் இருந்து நேற்று இரவு 10.30 மணியில் இருந்தே உடல் சிதைந்து துர்நாற்றம் வீசியதாக கூறினார்.
இந்நிலையில் இன்று காலை 04.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித்தை இறந்த நிலையில் மீட்புக்குழுவினர் மீட்டனர்.
.