85 ல் இருந்து 100 அடிக்கு சென்ற சுர்ஜித்.. 3 மீட்டர் தொலைவில் குழி தோண்ட முடிவு..!

Default Image

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் தொடர்ந்து 24 நேரத்திற்கு மேலாக மீட்பு படையினர் மீட்க போராடி வருகின்றனர்.
அரசு பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவி வருகின்ற நிலையில் தற்பொழுது ஆழ்துளை கிணற்றில் இருந்த குழைந்தை, 85 அடி ஆழத்தில் இருந்து 100 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டார்.
குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் 3 மீட்டர் தொலைவில் என்.எல்.சி , ஓஎன்ஜிசி மற்றும்  தீயணைப்பு வீரர்கள் 3 மீட்டர்கள் தொலைவில் மற்றொரு குழியை தோண்டி, தீயணைப்பு வீரர்கள் 2 பேரை இறக்கி விட்டு குழந்தையை மீட்க முடிவு செய்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்