திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் – மேரி தம்பதியின் மகன் தான் 2 வயது சுர்ஜித் . இந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தன் வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது 05 .40 மணிக்கு அங்கு பராமரிப்பில்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி சுர்ஜித் விழுந்துவிட்டான்.
ஆழ்துளை கிணற்றில் முதலில் 26 அடி ஆழத்தில் சுர்ஜித் இருந்துள்ளான். அப்போது அவனை மீட்கும் முயற்சிகள் நடைபெறும் வேளையில் அச்சிறுவனுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. அப்போது அவனது உடல்நிலை நன்றாக இருக்கிறான் எனவும் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்தது மீட்பு பணி, பின்னர் பொக்லைன் எந்திரம் கொண்டு, ஆழ்துளை கிணற்றை சுற்றி தோண்டப்பட்டது.15 அடி ஆழம் தோண்டுகையில் பாறை இருந்ததால், அதற்க்கு மேல் பொக்லைன் எந்திரத்தால் பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
பின்னர் கோவையில் இருந்து டேனியல், மதுரையில் இருந்து மணிகண்டன், நாமக்கல்லில் இருந்து ஸ்ரீதர் என பலரும் இந்த மீட்பு பணியில் தங்களது பங்களிப்பை அளித்தனர்.ஆனால் இவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து ஐஐடி-யில் வெங்கடேசன் என்பவர் கண்டறிந்த ஒரு சாதனமானது உள் செலுத்தப்பட்டது. அந்த சாதகமானது 15 கிலோ எடைகொண்டது.இதன் மூலம், கேமிரா, மைக், ஆக்சிஜன் என அனைத்தும் கொண்டு செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த சாதனம், ஆழ்துளை கிணற்றின் விட்டத்தை விட சற்று பெரியதாக இருந்ததாலும், அதனை மேலும் உள்செலுத்த முடியாததாலும், இந்த முயற்சியும் கைவிடப்பட்டது.
பின்னர் சுர்ஜித் 70 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்தான்.அதன் பின்னர் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழு நடுக்காட்டுபட்டிக்கு விரைந்தனர். பிறகு சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வந்தது. பிறகு சிறுவன் கை, முகம் மூடும் அளவிற்கு மண் மூடியிருந்தால் இடுக்கி போன்ற கருவி மூலம் சுர்ஜித்தை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் பிறகு மேற்கொண்ட முயற்சியின் மூலம் சுஜித் 70 அடியில் இருந்து 85 அடி தூரத்திற்கு சென்றார்.
இதை தொடர்ந்து சுர்ஜித்தின் கை மேலே மட்டும் தெரிந்தது.மீண்டும் சுஜித் கீழே சென்று விடாதபடி இருக்க ஏர் லாக் மூலம் கை பிடிக்கப்பட்டது. சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க அதிகாரிகள் திட்டம் மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி தோண்ட இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வர வைக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அருகில் 3 மீட்டர் தொலைவில் ஒரு மீட்டர் அகலத்தில் 95 அடி ஆழத்திற்கு குழி தோண்ட முடிவு செய்யப்பட்டது.
ஞாயிற்றுகிழமை காலை 07.10 மணிக்கு முதல் ரிக் இயந்திரம் குழி தோண்டும் பணியை தொடங்கியது. 15 அடிக்கு கீழ் பாறையாக இருந்ததால் குழி தோண்டும் பணி தொய்வு ஏற்பட்டது. பின்னர் அதிக திறன் கொண்ட இரண்டாவது ரிக் இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.முதல் இயந்திரத்தை விட இரண்டாவது ரிக் இயந்திரம் மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது.
முதல் ரிக் இயந்திரம் 35 அடிவரை குழி தோண்டியது. இதை தொடர்ந்து இரண்டாவது ரிக் குழி தோண்டும் பணியை தொடங்கியது. கீழே கடினமான பாறைகள் இருந்ததால் இரண்டாவது ரிக் இயந்திரம் நேற்று மதியம் வரை 10 அடி வரை மட்டுமே தோண்டியது.
இதனால் அதிகாரிகள் புதிய திட்டத்தை செய்ய முடிவு செய்தனர்.அதன் படி கடினமான பாறைகளில் துளையிட ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரத்தின் மூலம் துளையிட முடிவு செய்யப்பட்டது. பிறகு போர்வெல் இயந்திரத்தின் மூலம் பணியை தொடங்கப்பட்டது.
போர்வெல் இயந்திரம் மூலம் பாறையில் மொத்தமாக ஐந்து துளைகள் போடப்பட்டது.அதில் ஒரு துளை 40 அடியும் மற்ற துளைகள் 15 அடி ஆழத்திற்கும் துளையிடப்பட்டது. மீண்டும் நேற்று மாலை இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணி தொடங்கியது.
இதனால் இரவு 9 மணிக்கு ரிக் இயந்திரம் மூலம் 65 அடியை எட்டப்பட்டது.சுஜித் விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் ரிக் எந்திரம் மூலம் துளையிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இரவு, பகலாக 80 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வந்தது.
இதனையடுத்து பணிகள் 2 மணி அளவில் நிறுத்தப்பட்டது. அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.ஆழ்துளை கிணற்றில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு உடல் சிதைந்த நிலையில் துர்நாற்றம் வீசியதாக கூறினார்.இதனால் சிறுவன் சுஜித் உயிர் இறந்ததாக ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…