விரைவில் அறுவை சிகிச்சை.. தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி – காவேரி மருத்துவமனை அறிவிப்பு
செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழு பரிந்துரை.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தான்படி, காவேரி மருத்துவமனையில் ஓரிரு நாட்களில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு முன் செய்ய வேண்டிய மேற்கொள்ளப்படுகின்றன. மயக்க மருந்து பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும். இதய அறுவை சிகிச்சைக்கான மூத்த மருத்துவர் ஏஆர் ரகுமாம் குழு பரிந்துரைத்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு ஏற்றவாறு உடல்நிலை உள்ளதா என பரிசோதித்து வருகிறோம். பரிசோதனைகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை திட்டமிடப்படும். தற்போது ஐசியூவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் கூறியுள்ளது.