சுரேஷ் பரபரப்பு தகவல் ..! அந்த ஒரு கிலோ நகை போலீசாரிடம் இருக்கிறது..!
- நேற்று போலீசார் சுரேசை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அப்போது போலீசார் என்னிடம் 5.7 கிலோ நகையை பறிமுதல் செய்தனர்.ஆனால் 4.7 கிலோ நகையை மட்டுமே மீட்டதாக கூறியுள்ளனர்.
- அந்த ஒரு கிலோ நகை திருவாரூர் போலீசாரிடம் இருப்பதாக கூறினார்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி ரூ.13 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருவாரூரை சேர்ந்த மணிகண்டன் , மதுரையை சேர்ந்த கணேசன் மற்றும் கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளிகளான கனகவல்லி மகன் சுரேஷ் சங்கம் நீதிமன்றத்திலும் ,கொள்ளை கும்பல் தலைவனான முருகன் பெங்களூருவில் உள்ள 11-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி பெங்களூர் போலீசார் முருகனை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று போலீசார் சுரேசை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டு இருந்த வேனில் இருந்த சுரேஷ் ஒரு தகவலை வெளியிட்டார்.அதில் லலிதா ஜூவல்லாரி கொள்ளை வழக்கில் போலீசார் என்னிடம் இருந்து 5.7 கிலோ நகையை பறிமுதல் செய்தனர்.
ஆனால் 4.7 கிலோ நகையை மட்டுமே மீட்டதாக கூறுகின்றனர். மீதி உள்ள ஒரு கிலோ நகைக்கு நான் எங்கே போவது..? அந்த ஒரு கிலோ நகை திருவாரூர் போலீசாரிடம் உள்ளது என கூறினார்.