கந்த சஷ்டி வீடியோ விவகாரம் -கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் சரண்

Default Image

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி   காவல் நிலையத்தில் சரண்டைந்தார்.

கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது .மேலும் இது தொடர்பாக  காவல் நிலையத்தில் புகார்களும்  அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி  அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண்டைந்தார்.ஏற்கனவே இந்த சர்ச்சை வீடியோ தொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்