இன்று மாலை திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது!

Default Image

திருச்செந்தூரில் இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மாலை கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி முக்கியமாக நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டும் கடந்த 15-ஆம் தேதி துவங்கிய முருகன் ஆலய கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இந்த வருடம் கொரனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் கடற்கரையில் இந்த சூரசம்ஹார நிகழ்வு நடத்துவது வழக்கம், அது போல இந்த ஆண்டும் அதற்கு அனுமதி கோரி பக்தர்கள் மற்றும் கோவில் சார்பில் கேட்கப்பட்டிருந்தது. தற்போது கடற்கரையிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை அதுபோல கோயில் வளாகம், மண்டபம் மற்றும் விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுகளை அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் கட்டாயம் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வந்தாலும் இந்த நிகழ்வு நடக்கக்கூடிய நேரங்களில் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இருப்பினும் ஒவ்வொரு வருடமும் நடப்பதுபோல கடற்கரையில் மிகக் கோலாகலமாக இந்த சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் வழியாக பார்ப்பதற்கே மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்