சூரசம்ஹாரம் விழா : தூத்துக்குடிக்கு 9 – ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
சூரசம்ஹாரம் விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் செந்திலராஜ் தூத்துக்குடிக்கு 9 – ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
கந்தசஸ்டியையொட்டி வருகின்ற 9 ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்காக வருகின்ற 9 ஆம் தேதியை உள்ளூர் விடுமுறையாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். மேலும், 27 ஆம் தேதியை பணி நாளாகவும் அறிவித்துள்ளார்.