கோலாகலமாக திருச்செந்தூரில் துவங்கியது சூரசம்ஹாரம் நிகழ்வு!

கோலாகலமாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று துவங்கியது சூரசம்ஹார நிகழ்வு.
வருடம் தோறும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோலாகலமாக நடைபெறக்கூடிய சூரசம்ஹார நிகழ்வு, இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக துவங்கியுள்ளது. முக்கியமான நிகழ்வாக நடைபெறக்கூடிய இந்த சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையில் தான் நடைபெறும், இந்த முறையும் அவ்வாறு நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி பக்தர்களுக்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த நிகழ்வு நேரலையில் ஒளிபரப்ப அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாலை 4.00 மணியளவில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் மிக கோலாகலமாக சூரசம்ஹார நிகழ்வு துவங்கி நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025