அரசு இல்லத்தை காலி செய்ய சூரப்பா மறுப்பு..!
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் அரசு இல்லத்தை காலி செய்ய சூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதால் அரசு இல்லத்தை காலி செய்ய சூரப்பாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் 2 நாள் கெடு முடிந்த பிறகும் வீட்டை காலி செய்ய சூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. அவர் மீது இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது. எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளது. இன்னும் மூன்று முதல் நான்கு சாட்சிகள் மட்டுமே விசாரணை நடத்த வேண்டியுள்ளது என விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.