தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது-முதல்வர் பழனிசாமி
தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் எடப்பாடியில் புதிய நீதிமன்றம் திறப்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், நீதிமன்றங்களை கணினி மயமாக்க போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க அரசு பரிந்துரை செய்யும்.
தமிழக அரசின் முயற்சியால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.கடந்த 8 ஆண்டுகளில் நீதித்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.