உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட விதிகளை முறைப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது உச்சநீதிமன்றம்,பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் முடியாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா? என்று கேள்வி எழுப்பியது.இதற்கு 9 புதிய மாவட்ட தொகுதி மறுவரையறைக்காக முழு தேர்தலுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும், வேண்டுமெனில் 9 புதிய மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை தள்ளி வையுங்கள் என்று தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
பின்னர் நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியாக இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு உச்சநீதிமன்றம் வழங்குகிறது உச்சநீதிமன்றம்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…