அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ! நான் மதிக்கிறேன் -ரஜினிகாந்த் கருத்து
உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இன்று அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன்.அனைவரும் மதிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் மத பேதம் இன்றி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.