சபரிமலை தீர்ப்பு..!உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது..! கி.வீரமணி
சபரிமலை தீர்ப்பு தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்தார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார்.
இதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து ஏற்பதாக நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் அறிவித்தனர். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என 5 நீதிபதிகள் அமர்வில் 4 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.அதில் நீதிபதி தீபக் மிஸ்ரா,நீதிபதி கன்வில்கர், நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட் ஆகியோர் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழகியுள்ளனர்.ஆனால் தலைமை நீதிபதி அமர்வில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
அவர் அளித்த தீர்ப்பில் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.
இந்நிலையில் தீர்ப்பு தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.