உச்சநீதிமன்றம் தீர்ப்பு! ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி – மநீம தலைவர் கமல்ஹாசன்!

kamal haasan

தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம் தான் ஜல்லிக்கட்டு தீர்ப்பு என மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது  ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பான அவரது பதிவில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.

இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்று அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்றம் தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்