உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது – மு.க. ஸ்டாலின்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றபோது ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும் சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.— M.K.Stalin (@mkstalin) November 26, 2019
இந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில்,மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.