கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும், கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், சங்கரின் சகோதரர் விக்னேஸ்வரன் மனு மீது பதிலளிக்க கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 10 எதிர்மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…