பேரறிவாளன் விடுதலை – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Published by
Venu
  • உச்சநீதிமன்றத்தில்  ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.
  • இந்த வழக்கில் தமிழக  அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். முதலில் இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.தற்போது  7 பேரும் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இதற்கு இடையில் உச்சநீதிமன்றத்தில்  ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் ,பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக, தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில் ,ராஜீவ்காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு தொடர்பாக புதிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில் எந்த திருப்தி  இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது.அப்பொழுது,பெல்ட் குண்டு தொடர்பாக  புதிய தகவலை பெற முடியவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது .பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட முடிவுகள் குறித்து  2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

 

 

Published by
Venu

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

5 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

5 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

7 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

8 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

8 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

8 hours ago