பெரியார் சிலைக்கு கிழே கடவுள் மறுப்பு வாசகத்தை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைந்து இருக்கும் சமுக சீர்திருத்தவாதி பெரியார் சிலைகளின் கீழ் கடவுள் மறுப்பு வாசகம் இடம் பெற்று இருக்கும். பெரியாரே தனது சிலை நிறுவினால், அதில் கடவுள் மறுப்பு வாசகம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என கூறியதன் பெயரின் அவர் சிலைக்கு கீழே கடவுள் மறுப்பு வாசகம் இடம்பெற்று இருக்கும்.
கடவுள் மறுப்பு வாசகங்களை நீக்க வேண்டும், அது கடவுள் வழிபடுவோரின் மனதை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு விசாரிக்க தொடங்கியது. இது குறித்து, ‘ கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை பராமரிக்க தமிழக அரசு தொடர்ந்து செலவு செய்ய முடியுமா.?’ எனவும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…