திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி 20 லட்சம் பறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்- ஜெயக்குமார் பேட்டி ..!
மேலும், அங்கித் திவாரி விவகாரத்தில் கைப்பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். அப்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் “தமிழ்நாட்டை மட்டும் அமலாக்கத்துறை குறி வைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அசாம் முதல்வர் மீது எப்.ஐ.ஆர் உள்ள நிலையில் அந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்ததா..? உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அமலாக்கத்துறை எந்த விசாரணையும் நடத்தாதது” என்று கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து, உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிபதி விஸ்வநாதன் தெரிவித்தார். அதே வேளையில் அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் நடக்கும் சில வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…