உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் – உச்சநீதிமன்றம்

Published by
லீனா

உப்பூர் அனல்மின் நிலையம் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பூர் அனல்மின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் விதிகளை கடைபிடிக்கவில்லை எனக்கூறி,  தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கினை காளிமுத்து என்பவர் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்த திட்டமிடப்பட்ட 1,342 ஏக்கர் நிலத்தில் பெரும்பாலான நிலங்கள் விவசாய நிலங்கள் என்றும், எந்த பொது விசாரணை நடத்தப்படவில்லை என்றும்,  சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு முறையாக நடத்தப்படவில்லை என்றும்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்க வழங்கிய ஒப்புதல் முறையாக வழங்கப்படவில்லை என கூறி அதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தின் தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையானது, இன்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் குமரன் மற்றும் நரசிம்மன் ஆகியோர் ஆஜராகி இருந்தார்கள்.

இதனையடுத்து, இந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதால் மாதத்திற்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும், அங்கு இருக்கக் கூடிய கருவிகள் மற்றும் பொருட்கள் பழுதடைந்து விடும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.  இதனை தொடர்ந்து, உததரவுகளை பிறப்பித்த நீதிபதி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும், தொடர்ந்து அனல்மின்நிலையம் இயங்க அனுமதி அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சகம் பதிலளிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

17 minutes ago

பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…

47 minutes ago

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

8 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

10 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

10 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

11 hours ago