அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மனு – உச்சநீதிமன்றம் முக்கிய அறிவிப்பு

Supreme court: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு 8ம் தேதி விசாரணை.
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 8ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து ஐ பெரியசாமியை விசாரணை நீதிமன்றம் விடுவித்த நிலையில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். இதனை எதிர்த்து அமைச்சர் ஐ பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விரைந்து விசாரிக்க ஐ பெரியசாமி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ஐ பெரியசாமியின் கோரிக்கையை ஏற்று, அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை வரும் 8ம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ல் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முறைகேடாக ஒதுக்கியதாக ஐ.பெரியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கிடேஷ். பின்னர் ஐ.பெரியசாமி மீதான வழக்கை முறையாக ஒப்புதல் பெற்று விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
GT vs PBKS: பொளந்து கட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்… மிரண்டு போன குஜராத்துக்கு இது தான் டார்கெட்.!
March 25, 2025
பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்.!
March 25, 2025
GT vs PBKS: வெற்றி யாருக்கு? பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு.!
March 25, 2025