தமிழக ஆளுநரின் செயல்பாடு சட்டப்படி தவறானது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

மாநில அரசு பேரவையில் தாக்கல் செய்யும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Supreme court of India - TN Governor RN Ravi

டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார். துணை வேந்தர் நியமனங்களில் சட்டத்தை மீறி செயல்படுகிறார், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நியமிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. அதில், மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்யும் ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது என தீர்ப்பு வாசித்து வருகின்றனர்.

  • மாநில அரசு பேரவையில் தாக்கல் செய்யும் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை.
  • ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
  • அரசியல் சாசனம் 200-வது சட்டப்பிரிவின் கீழ் தான் மாநில ஆளுநர் செயல்பட வேண்டும்.
  • நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் அவர் முடிவு செய்ய வேண்டும்.
  • மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை.
  • ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரம் இல்லை.
  • சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு அது ஆளுநரால் திருப்பி அனுப்பட்ட பிறகு அதில் எந்த மாற்றமும் செய்யாமல் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்டத்திற்கு எதிரானது.

என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்