அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.!
Ankit Tiwari : திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபு என்பவரை மிரட்டி அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கித் திவாரி 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது.
Read More – 5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.!
இந்த வழக்கில் இருந்து இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தை அடுத்து உச்சநீதிமன்றத்தில் அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது.
Read More – ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் பேச்சு… மு.க.ஸ்டாலின் கண்டனம்
இருந்தும், இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசு அனுமதி இன்றி வெளியூர் செல்ல கூடாது. விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கு சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை குறிப்பிட்டுள்ளது.
மேலும், அங்கித் திவாரி வழக்கு குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று வழக்கை வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.