பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு ! உச்சநீதிமன்றம் உத்தரவு
பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் வழங்கிய உச்சநீதிமன்றம் இப்போது மீண்டும் ஒரு வாரம் பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு,தற்போது சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.இதன் பின்பும் பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவாரம் பரோல் வழங்கிய நிலையில் ,மீண்டும் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.