திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு வாக்களர்களுக்குப் பரிசு பொருட்கள் வழங்கினார். பரிசுப் பொருள்கள் வழங்கியதை தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிகாரிகள் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனவே திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை அணுகவும் இந்த விவகாரத்தை விசாரித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
சென்னை உச்சநீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து நிலையில், அதை எதிர்த்து திருப்பதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், இந்த மனு இன்று பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து விட்டதால் தாங்கள் விசாரிக்க முடியாது என கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெருமான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…