#BREAKING : சாத்தான்குளம் விவகாரத்தில் முதல்வரை விசாரிக்க கோரிய வழக்கு – தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Published by
Venu

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ், காவல் மரணம் தொடர்பாக  முதல்வர் பழனிசாமி மீது விசாரணை நடத்தக்கோரிய வழக்கினை   உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.இதற்கு இடையில் இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், கோவில்பட்டி சிறையில் தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவு காரணமாகவும், மகன் பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் முதலமைச்சரின் இந்த அறிக்கைக்கு கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவரது வழக்கில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததாக முதல்வர் கூறியதால் அவரை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று  விசாரித்து. அப்பொழுது வழக்கினை தள்ளுபடி செய்வதாக  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Recent Posts

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

4 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

4 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

5 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

5 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

6 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

7 hours ago