வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பீகார் யூ-டியூபருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ளது.
வடமாநில தொழிலாளார்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போன்ற பொய்யான வதந்தி செய்திகளை ஒரு சிலர் பரப்பி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தினர். இதில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வதந்தி பரப்பியோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பீகார் யூ-டியூபர் கைது :
இதில் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பொய்யான விடியோவை இணையதளத்தில் பீகாரை சேர்ந்த யுடியூபர் மணிஷ் காஷ்யப் என்பவர் வெளியிட்டார். போலி செய்திகளை பரப்பி மக்களிடையே பதற்றத்தை உண்டு பண்ணியதாக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் (மார்ச்) 18ஆம் தேதி கைது செய்தனர்.
ஜாமீன் மறுப்பு :
இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனிஷ் காஷ்யப் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த போது, ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக பீகார் மாநில அரசும், தமிழக அரசும் விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…