வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி.! யூ-டியூபருக்கு ஜாமீன் மறுத்த உச்சநீதிமன்றம்.!

Default Image

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பீகார் யூ-டியூபருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் தர மறுத்துள்ளது. 

வடமாநில தொழிலாளார்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போன்ற பொய்யான வதந்தி செய்திகளை ஒரு சிலர் பரப்பி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தினர். இதில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வதந்தி பரப்பியோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பீகார் யூ-டியூபர் கைது :

இதில் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பொய்யான விடியோவை இணையதளத்தில் பீகாரை சேர்ந்த யுடியூபர் மணிஷ் காஷ்யப் என்பவர் வெளியிட்டார். போலி செய்திகளை பரப்பி மக்களிடையே பதற்றத்தை உண்டு பண்ணியதாக அவர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் (மார்ச்) 18ஆம் தேதி கைது செய்தனர்.

ஜாமீன் மறுப்பு :

இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் மனிஷ் காஷ்யப் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்த போது, ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக பீகார் மாநில அரசும், தமிழக அரசும் விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park