சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம், நீதிபதி வைத்தியநாதன் நீதி வழங்குவதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 10 ஆண்டுகள் பணியாற்றிய போது பல வழக்குகளை தீர்ப்பு வழங்கியதன் மூலம் நீதித்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு சிறப்பாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
நீதிபதி வைத்தியநாதன் அக்டோபர் 25, 2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 1986 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். நீதிபதி வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு தீர்ப்பாயங்களில் பணியாற்றி உள்ளார்.
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…