#BREAKING :உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறையை ரத்து.!
சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, புதுச்சேரி கிழமை நீதிமன்றங்களில் கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தமைலையில் நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறை ரத்து என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், மதுரைக் கிளை, புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களில் கோடை விடுமுறை ரத்து ,மே 1 முதல் 31-ம் தேதி வரை அறிவித்த கோடை விடுமுறை நிறுத்தி வைப்பு என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் அறிவித்துள்ளார்.
இதனால் மே மாதம் முழுவதும் வழக்கமான நாட்களை போன்று நீதிமன்றப் பணிகள் அனைத்தும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.